Mahan – மகான் (Tamil)

499.00

Availability: 94 in stock

ஒருவருக்கு உலகில் இருக்க வேண்டியவை எவை, இருக்கக்கூடாதவை எவை என்பது குறித்து கால் மாக்ஸ் குறிப்பிட்டிருக்கிறார். அனால் ஆதிகாலந்தொட்டு, பாரதத்தில், இவையிரண்டையும் விட வேறொன்று இருந்து வருகிறது, அது இன்றும் தொடர்கிறது. இது உலகில் எது வேண்டுமானாலும் பெறலாம் என்ற நிலையிலும், எதுவும் வேண்டாம் என்று வாழ்பவர்களைப் பற்றியதாகும். அதாவது மகான்களைப் பற்றியதாகும். இவர்கள் எப்போதும் அகத்தில் பரவசத்தில் நிலைத்திருந்து, பரிபூரண சுதந்திரத்துடன் பற்றற்று வாழ்பவர்கள். நீங்கள் உலகில் இழந்து விட்ட மகிமைகளை நினைவூட்டிடவே அவர்கள் வாழ்கிறார்கள். அதாவது நீங்களும் உங்கள் அகத்தினுள் சென்று ஆனந்தப்பரவசத்தில் நிலைத்திருக்கலாம் , நீங்கள் நீங்களாகவே இருக்கலாம், ஒரு மகானாக இருக்கலாம் என்பவற்றை நினைவூட்டிடவே அவர்கள் வாழ்கிறார்கள். ஆத்மானந்த சைதன்யரின் உன்னதமான  வாழ்க்கையின் ஊடாக, இந்த அற்புதமான மகான்கள், மற்றும் அவர்கள் பிரதிபலிக்கும் மகோன்னதமான சம்பிரதாயம் என்பவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். ஆத்மானந்தர் என்பவர் தனியே ஒரு மனிதன் அன்று. அவர் நாம் விழித்தெழுவதற்கான ஒரு அழைப்பு. இந்நூல், மனிதர்களை செயல்களின் மாயைகளில் இருந்து விழித்தெழுந்து, ஒவ்வொரு நொடியிலும் வாழ்தல் மற்றும் பரிபூரண நிறைவு என்பவற்றின் மடியில் தவழ விடலாம். இது, ஒரு சாதாரண மனிதன், தான் என்ற நிலையில் இருந்து பிரபஞ்சம் எங்கும் பரந்து விரிந்த நிலையை எட்டுவதற்கான சாத்தியப்பாடுகளை விளக்கும் கதையாகும். அவர் அனைவரிலும் இருக்கிறார். எங்கும் நிறைந்தவர். நீங்களும் அவரே தான்.Mahan (Tamil translation of Mast – The Ecstatic by Mohanji)

product

related product

Price Based Country test mode enabled for testing Norway. You should do tests on private browsing mode. Browse in private with Firefox, Chrome and Safari

login